Faculty Members with The Principal

Tamil-Department

நோக்கு (Vision)

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு

செம்மொழியாம் தமிழ்மொழியின் பழம்பெருமைகளை மாணாக்கர்களுக்குக் கற்பிப்பதுடன் அவற்றின் வழி சிறந்த சமூகத்தை உருவாக்குவதும் உலகம் முழுவதும் தமிழ்த்துறை மாணவர்களுக்கு உள்ள வேலை வாய்ப்பினை அறிமுகப்படுத்துவதும், தமிழ் மொழி மற்றும் இலக்கியத்தை உலக இலக்கியங்களோடு ஒப்பிட்டு அவற்றிற்கு இணையாக மற்றும் மேலாக தமிழை மேம்படுத்துவதும்  தமிழ்த்துறையின் நோக்கம் ஆகும். தன்னாட்சித் தகுதி பெற்றவுடன் தமிழ்த்துறைப் பாடத்திட்டங்கள் மாணவர்களின் வேலைவாய்ப்பு நோக்கில் மாற்றியமைக்கப்பட்டன.

இலக்கு (Mission)

தமிழியல் கல்வியைப் புதுமைக்கும் உலகமயமாதலுக்கும் ஏற்ப மாற்றி, பல்துறை ஆய்வூக்கமும் செயல்திறனும்,  நோக்கும் கொண்டதாக புதுமை பாதையில் நடைபோடும் வகையில் சிறப்புற அமைப்பதும், கணினி, இணையம் சார்ந்து மாணவர்கள் அறிவைப் பெறவும் அதன் அடிப்படையில் வேலை வாய்ப்புகள் உருவாக வழிகாட்டுவதும்.

மொழி, இலக்கியம், கலை முதலான பண்பாட்டு நிகழ்வுகளைக் கண்காட்சி மற்றும்  போட்டிகள் நடத்தி அவற்றை  ஆவணப்படுத்தி எதிர்காலச் சமூகத்திற்கு வழங்குவதும் தேவையான மரபுகளையும் மனித மதிப்புகளைத்  தொடர்ந்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வதும்,  நனி நாகரிகச் சமூகத்தைக் கட்டமைப்பதும், அனைத்துத் தரப்பு மக்களோடும் இயற்கையோடும் தம் உறவை  மேம்படுத்திக் கொள்ள பயிற்சியளிப்பதும் தமிழ்த்துறையின் இலக்காகிறது.

தமிழ்த்துறையின் சிறப்பம்சங்கள்

1879 இல் கல்லூரி துவங்கிய போதே, அனைத்துப் பாடப்பிரிவுகளுக்கும்,பாகம் -1 தமிழ் கற்பிக்கும்முகமாகத் தமிழ்த்துறையும் மலர்ந்தது.  தற்போது ஆய்வியல் நிறைஞர் (M.Phil.,) முனைவர் பட்ட (Ph.D.,) ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. மாணாக்கர்களின் தமிழ்மொழி அறிவையும் தமிழ் இலக்கிய அறிவையும் வளர்ப்பதுடன் உலகெல்லாம் விரவியுள்ள தமிழ் இன மக்களின் வாழ்வியலையும் அறிமுகப்படுத்துவது மாணாக்கர்களின் கற்பனை, படைப்பாற்றல் திறனை மேம்படுத்துதல், தமிழ் இலக்கியங்களின் வழி அறியலாகும் வாழ்வியல் விழுமியங்களை கண்டுணர்ந்து புதிய பல ஆய்வுகளை நிகழ்த்துவது தமிழ்த்துறையின் இலக்காக அமைகின்றது. வழியே மாணவர்களுக்குத் தமிழ் உணர்வை அறிவித்தல், அறிவுறுத்தல், இலக்கியச்சுவையினை அளித்தல் ஆகிய முறைகளில் ஊட்டப்பெறுகிறது.

பேராசிரியர் தேவநேயப்பாவாணர், முனைவர் தி.முருகரத்தினம், முனைவர் ஆறுமுகம், முனைவர் உலகுசுப்ரமணியம், முனைவர் பெ.மாது போன்றோர் துறைத் தலைவர்களாகப் பணியாற்றிச் சிறப்பித்துள்ளனர்.

2014 ஆம்ஆண்டு முதல் முனைவர் சீ.குணசேகரன் அவர்கள் துறைத்தலைவராகச் செயலாற்றிவருகிறார்கள்.யுஜிசிதகுதித்தர்வில் தேர்ச்சிபெற்ற தகுதிவாய்ந்த நான்கு இணைப்  பேராசிரியர்களோடும்,  பத்து உதவிப்பேராசிரியர்களோடும் தமிழ்த்துறை இன்றுசிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. பேராசிரியர்கள் பன்னிருவர் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்கள். ஆய்வை முடிக்கும் தருவாயில் இருவர் உள்ளனர்.
மாணவர்கள்  பலர் யுஜிசி தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றுள்ளனர்.  இக்கல்லூரி மாணவர்கள் பல அரசுப்பணிகளில் பணி வாய்ப்பு பெற்றுள்ளனர். இத்துறையிலும் பணியாற்றி வருகின்றனர்.

துறையின் சார்பில் நடத்தப்பெறும் தமிழ் இலக்கிய மன்றக் கூட்டங்களில் துறைசார்ந்த பல்வேறுஅறிஞர்பெருமக்கள் பேருரையாற்றிச் சிறப்பித்துள்ளனர்.

பல்வேறு துறைகளில் பயிலும் மாணவியர்க்குத் துறையின் சார்பில் இலக்கியப் போட்டிகள், வினாடி – வினாப் போட்டிகள், நாடகம்,கட்டுரைப் போட்டி,  தமிழ்க்கவிஞர் பாடல் ஒப்புவித்தல் போட்டி ஆகியன நடத்தப்பட்டு, பரிசுகளும் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழ்த்துறை, ஆண்டுதோறும் பாவாணர் பெயரில் அனைத்து துறை மாணவர்களுக்கும்  தமிழின் தொன்மை, செம்மொழித்தன்மை குறித்த போட்டிகள் நடத்தப்பட்டு,  இலக்கியத்தின் மீது ஆர்வத்தை ஏற்படுத்திவருகிறது.  இத்துறையில் பயின்ற மாணவர்கள் ஆசிரியர்களாக, கல்லூரிப் பேராசிரியர்களாக, திரைப்படக் கலைஞர்களாக, தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர்களாக, தனியார் வங்கி பணியாளர்களாக சிறந்த விளையாட்டு வீரர்களாக, இதழியல் கலைஞர்களாக காவல் துறைப்பணியாளர்களாகச் சமுதாய வளர்ச்சிக்கும் உயர்விற்கும் தங்கள் உழைப்பை நல்கி வருகின்றனர். செம்மொழி மத்திய நிறுவனத்தின் நிதி நல்கையுடன் பத்து நாள் பயிலரங்கு இரண்டு முறை நடத்தப்பட்டுள்ளது. ஒருநாள் கணினி பயிலரங்கு நடத்தப்பட்டுள்ளது. மாணவர்களின் தொழில் திறனை மேம்படுத்துவதற்காக  பசுமைப்புரட்சி,இயற்கைஉணவு, சுகாதார மேம்பட்டுப் பொருட்காட்சி சேலம் மாவட்டஆட்சியரைக் கொண்டு துவக்கி வைக்கபட்டுச் சிறப்பாகநடத்தப்பட்டது.

 

IMG-20171012-WA0038
Programmes Medium Shift Intake
B.A I 50
II 40
M.A 30
M.Phil
Ph.D
S.No NAME DESIGNATION QUALIFICATION SHORT
PROFILE
1 Dr. S.GUNASEKARAN Associate Professor & Head M.A.,M.Phil.,Ph.D.,
2 Dr.P.MUTHUSWAMY Associate Professor M.A.,M.Phil.,Ph.D.,
3 Dr.R.SHANTHY Associate Professor M.A.,M.Phil.,Ph.D.,
4 Dr.J.PREMALATHA Associate Professor M.A.,M.Phil.,Ph.D.,M.Ed.,
5 Dr.S.DEVARAJU Assistant Professor M.A.,M.Phil.,Ph.D.,
6 Dr.R.ACHUTHAN Assistant Professor M.A.,M.Phil.,Ph.D.,
7 Dr.T.K.CHITIRAISELVI Assistant Professor M.A.,M.Phil.,B.ED., Ph.D.,
8 Dr.V.OUMARANY Assistant Professor M.A.,M.Phil.,Ph.D.,
9 Dr. K. KARTHIKEYAN Assistant Professor M.A.,M.Phil.,Ph.D.,
10 Mr. R.SRINIVASAN Assistant Professor M.A.,M.PHIL.,
11 Dr. M.SHANMUGAPRIYA Assistant Professor M.A.,Ph.D.,
12 Mr. R.THIRUPPATHI Assistant Professor M.A.,
13 Dr. K.CHANDRAN Assistant Professor M.A.,M.Phil.,Ph.D.,NET.,
14 Dr. K.GOWRI Assistant Professor M.A.,M.Phil.,